உத்திரத்தில் உதித்த உன்னத அருள்
உத்திரத்தில் உதித்த உன்னத அருள் ஸ்ரீமதி அனுராதா சேஷாத்ரி, பெங்களூரு பிராட்டியின் தோற்றமும் ஏற்றமும் ஸ்ரீ குணரத்ன கோ ஶ ம் (49) स्खलितकटकमाल्यैर्दोर्भिरब्धिं मुरारेः भगवति दधिमाथं मथ्नतः श्रान्तिशान्त्यै । भ्रमदमृतरङ्गावर्ततः प्रादुरासीः स्मितनयनसुधाभिस्सिञ्चती चन्द्रिकेव ॥ ४९॥ எம்பெருமான் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, தனது திருத்தோள்களாலும் திருக்கரங்களாலும் தயிரைக் கடைவது போன்று கடைந்தான். அப்போது அவன் திருக்கரங்களில் அணிந்திருந்த ஆபரணங்கள் நழுவின. அவனது மாலைகளும் சிதறின. இவ்வாறு கடைந்து களைப்புற்றிருந்த எம்பெருமானின் நிலையை கண்ட பெரிய பிராட்டி, அவனிடமுள்ள பரிவு மிகுதியால் அவன் சோர்வு நீங்கும்படி எழில் வீசும் புன்முறுவலுடனும் கனிவான திருப்பார்வையுடனும் தோன்றினாள்.அமுதினிடையே தோன்றிய பேரமுதாய், ஒரு பங்குனி உத்திர நன்னாளில் பெரிய பிராட்டி அவதரித்தாள். எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனுக்கு “ச்ரிய:பதி” என்கிற அசாதாரண திருநாமம் உண்டு. பிராட்டியின் திருநாமமோ பெருமை பொருந்திய “ஸ்ரீ” என்ற சொல்லாகும். “ஸ்ரீ” என்ற பதத்திற்கே மகாலட்சுமி என்று பொருள். எம்பெருமான் ஜகத்துக...